ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பி.ஆர்.கே)
பஞ்சாங்கினி ஹோமத்தின் பூர்ணாஹுதி நாளில், சுவாமிஜியைத் தேடி வந்தவர் குண்டூர் மாவட்டம் ஜில்லலுமுடியை சேர்ந்தவர், அவரது பெயர் அன்னம்ராஜு ராமகிருஷ்ணா காரு . சுவாமிஜி ஹடகேஸ்வரத்திற்கு வருவதற்கு முன்பே, நாம் அனைவரும் அவரைப் பார்ப்பதற்கு முன்பே அவருக்கு ஸ்ரீசைலம் திருப்பதி சத்திரத்தில் சுவாமிஜியின் தரிசனம் கிடைத்தது . அவருக்கு இந்த அகிலத்தை ஆளும் அம்பிகையின் அருள் கிடைக்க சுவாமிஜி அவருக்கு ஒரு மந்திரம் வழங்கினார் என்பதையும் கண்டுபிடித்தேன். ராமகிருஷ்ணா காரு அந்த மந்திரத்தை மிகுந்த சிரத்தையுடனும் பக்தியுடனும் தியானித்து வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க ஜில்லலுமுடி அம்மாவிடம் இருந்து ஒரு செய்தி வந்தது. அப்போதிருந்து, அவர் ஜில்லெலமுடியில் தங்கத் தொடங்கினார், ஒரு நாள் அம்மா சுவாமிஜியைப் பற்றி விசாரித்து, சுவாமிஜியை அழைத்து வருமாறு ராமகிருஷ்ணா காருவுடன் சொன்னார் . ராமகிருஷ்ணா காருவும் இதை சுவாமிஜிக்குத் தெரிவித்ததோடு அவரை ஜில்லலுமுடிக்கு அழைத்தார்.
சுவாமிஜி அவரது அழைப்பை ஏற்று ரமண பாபாவுடன் ஜில்லலுமுடிக்கு பயணிக்க தொடங்கினார். அங்கிருந்து தனது தபோஸ்தானமான காரயாரையும் பார்க்க விரும்புவதாக சுவாமிஜி எனக்குத் தெரிவித்தார். சுவாமிஜி தனது தபோஸ்தானத்திற்கு சென்றால் திரும்பி வரமாட்டார் என்ற அச்சத்துடன், நான் அவரைப் பின்பற்ற முயற்சித்தேன். அவர்களுக்குத் தெரியாமல், நான் அதே பேருந்தில் ஏறி பின் இருக்கையில் அமர்ந்தேன். பஸ் ஸ்ரீசைலத்திலிருந்து குண்டூருக்கு பயணித்தது . பயணத்தின் நடுவில், பின் சீட்டில் நான் அமர்ந்திருப்பதை சுவாமிஜி கவனித்தார், ஆனால் அவர்களுடன் சேர்ந்து அமர என்னை அழைக்க வில்லை. நானும் என் இருக்கையிலிருந்து நகரவில்லை. அவர்கள் குண்டூரில் இறங்கி, ப்ரோடிபேட்டையின் 5 வது தெருவில் இருந்த அன்னம்ராஜு மாதவராவ் காருவின் வீட்டிற்குச் சென்றனர். எனது மூத்த சகோதரர் பி.அஞ்சநேயுலு காருவின் வீடும், தம்பி பி. குருநாத ராவ்காருவின் வீடும் அதே இடத்தில் இருந்தன. சுவாமிஜி என்னை உள்ளே அழைப்பார் என்ற நம்பிக்கையுடன், மாதவராவ் காருவின் வீட்டிற்கு வெளியே ஒரு பெஞ்சில் அமர்ந்தேன். இரவு வந்தும் , நான் உள்ளே அழைக்கப்படவில்லை. நான் என் சகோதரனின் இடத்தில் இரவைக் கழித்துவிட்டு காலையில் திரும்பி வரலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் புறப்படுவதற்கு முன்பு சுவாமிஜி என்னை உள்ளே வரச் சொன்னார். சுவாமிஜி என்னிடம், “உன் வீடு அருகில் உள்ளது என்று கூறியிருந்தாய் அல்லவா ? வா , அங்கு செல்லலாம் ”என்றார் . சுவாமிஜி கொஞ்சம் தனிமையை விரும்புவதை நான் உணர்ந்தேன், எனவே அவரை என் தம்பியின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தேன். அந்த நேரத்தில் அவர்கள் எங்கள் இரண்டாவது சகோதரர் பி. காசி விஸ்வேஸ்வர ராவின் குடும்பத்தினருடன் தங்கியிருந்ததால் அவரது வீடு காலியாக இருந்தது. சுவாமிஜி அன்னம்ராஜு காருவின் வீட்டில் உள்ள அனைவரிடமும் அவர் காலையில் திரும்பி வருவதாக கூறி விட்டு என்னுடன் எங்கள் வீட்டிற்குத் வந்தார் . அது தட்டுக்களால் கட்டப்பட்ட வீடு, கதவுகள் கூட இல்லை. இருப்பினும், ஏராளமான காற்றோட்டமும் வெளிச்சமும் இருந்தது . சுவாமிஜி தூங்குவதற்காக நான் பாய்களை விரித்தேன் . சுவாமிஜியும் , “ஆ! இது மிகவும் நன்றாக இருக்கிறது ”என்று கூறி விட்டு அந்த பாயில் படுத்து தூங்கி விட்டார் . அடுத்த நாள் காலையில், நான் எனது சகோதரர்கள் அனைவருக்கும் தகவல் கொடுத்தேன், அவர்கள் சுவாமிஜியின் தரிசனம் செய்ய வந்தார்கள். எங்கள் தந்தை மற்றும் எங்கள் அண்டை வீட்டுகாரரான அர்ச்சகர் ராமகிருஷ்ணா சாஸ்திரி முன்னிலையில், சுவாமிஜிக்கு நாங்கள் பாதபூஜை செய்து புதிய ஆடைகளை வழங்கினோம். பூஜைக்குப் பிறகு, சுவாமிஜி எழுந்து படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வரமுடியாத என் தந்தையைப் பார்க்க அடுத்த அறைக்குள் சென்றார். சுவாமிஜி அதே படுக்கையில் என் தந்தையின் அருகில் அமர்ந்து அவருடன் சிறிது நேரம் பேசினார். என்னை நோக்கி, என் தந்தை சுவாமிஜியிடம், “நான் என் மகனை உங்கள் கைகளில் விட்டுவிடுகிறேன்” என்று கூறினார். சுவாமிஜி என் தந்தைக்கு உறுதியளித்தார், "நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை"என்று . இந்த வழியில், ஜூன் 26, 1969 அன்று எனது தந்தைக்கு சுவாமிஜியின் தரிசனம் கிடைத்தது , மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர் செப்டம்பர் 9, 1969 அன்று காலமானார் . பாத பூஜைக்கு நாங்கள் நைவேத்யமாக பாயசத்தை வழங்கினோம், பூஜைக்குப் பிறகு, சுவாமிஜியே எங்கள் முழு குடும்பத்திற்கும் அந்த பாயசத்தை வழங்கினார். அந்த காலங்களில், நாங்கள் அனைவரும் நிதி ரீதியாக சிரமப்பட்டுக் கொண்டிருந்தோம், வெறும் வயிற்றுடன் நாங்கள் படுக்கைக்குச் சென்ற நாட்களும் உண்டு . இருப்பினும், அந்த நாளுக்குப் பிறகு, நாங்கள் குருபூஜை செய்ததாலோ அல்லது சுவாமிஜி தானே எங்களுக்கு பயாசம் வழங்கியதாலோ என்னவோ , எங்கள் சகோதரர்களின் குடும்பங்கள் யாரும் அதன் பிறகு அந்த மாதிரி கஷ்டங்களை ஒரு போதும் எதிர்கொள்ளவில்லை.
ஸ்ரீ சுவாமி பூர்ணானந்தரின் தெய்வீக அருள் இதுதான். நாம் அவரிடம் சரணடையும்போது, நம்முடன் அவர் நம் எதிர்கால தலைமுறையினரையும் ஆசீர்வதிக்கிறார். நாம் செய்ய வேண்டியது அவரை நோக்கி ஒரு படி எடுத்து வைப்பது மட்டுமே. பதிலுக்கு, அவருடைய ஆசீகளை பொழிவதற்கு அவர் நம்மை நோக்கி பத்து படிகள் எடுத்து வைக்கிறார் .
தொடரும்
தமிழில் மொழிபெயர்த்தமைக்கு மிக்க நன்றி
நன்றி Jai Gurudev 🙏