ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பி.ஆர்.கே) எங்கள் வீட்டில் சுவாமிஜிக்கு நிகழ்த்தப்பட்ட பாதபூஜயை பார்த்த அன்னம்ராஜு ராமகிருஷ்ணா காரு , தனது வீட்டிலும் இதை செய்ய விருப்பம் தெரிவித்ததோடு, தேவையான ஏற்பாடுகளை செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். அடுத்த நாள், ராமகிருஷ்ணா காருவும் அவரது குடும்பத்தினரும் சுவாமிஜிக்கு பாதபூஜை நிகழ்த்தினர்.
அடுத்த நாள் ராமகிருஷ்ணா காரு சுவாமிஜியையும் , ரமணா பாபாவையும் மற்றும் என்னையும் ஜில்லெலுமுடிக்கு அழைத்து சென்றார். இது பாபட்லாவுக்கு அருகில் குண்டூர் மாவட்டத்தில் உள்ளது. ஜில்லெல்லமுடி அம்மாவின் பெயர் 'மாத்ருஸ்ரீ அனசூயா தேவி'. அம்மா 1923 இல் மன்னவா (குண்டூர் மாவட்டம்) என்ற கிராமத்தில் பிறந்தார். 1936 ஆம் ஆண்டில், ஸ்ரீ பிரம்மாண்டம் நாகேஸ்வர ராவ் காருவை மணந்தார். அதன் பிறகு, அவர்கள் ஜில்லெல்லமுடியில் குடியேறினார்கள் . உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் அம்மாவின் தரிசனத்திற்காக வருவார்கள், அவர் 'விஸ்வஜனனி', பிரபஞ்சத்தின் தாய் என்று பாராட்டப்பட்டு வணங்கப்பட்டார்.
அம்மாவுக்கும் சுவாமிஜிக்கும் இடையிலான சந்திப்பு எவ்வாறு நடக்கும், அவர்களுக்கு இடையே என்ன உரையாடல் நடக்கும் என்று நாங்கள் அனைவரும் ஆவலுடன் இருந்தோம். ஜில்லெல்லமுடியை அடைந்த பிறகு, சுவாமிஜியுடன், ரமணா பாபாவும் நானும் அம்மாவின் தரிசனம் செய்ய சென்றோம். சுவாமிஜியும் அம்மாவும் எதிரெதிரே அமர்ந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன பேசுவார்கள் என்று நாங்கள் ஆர்வமாக இருந்தோம், ஆனால் அவர்கள் இருவரும் அமைதியாக இருந்தார்கள். சிறிது நேரம் கழித்து, சுவாமிஜி மௌனத்தை உடைத்து,
“தாய் இல்லாத சிவன் கடைசியில் தன் தாயை கண்டுக்கொண்டான்”
என்றார்.
இந்த வழியில், சுவாமிஜி ஒரே வாக்கியத்தில் அம்மாவின் மகிமையும் அதன் மூலமாக தனது அந்தஸ்தையும் நிலை படுத்திக் கொண்டார் .
ரமணா பாபாவும் நானும் சுவாமிஜியுடன் ஜிலெல்லமுடியில் 4 நாட்கள் தங்கினோம். சுவாமிஜி அங்கிருந்து தனது தபோஸ்தானத்திற்கு செல்ல முடிவு செய்து, ஸ்ரீசைலத்திற்குத் திரும்பி வர தனக்கு விருப்பமில்லை என்று எனக்குத் தெரிவித்தார். இதற்கிடையில், அம்மா சுவாமிஜியிடம்,
“அன்புக்குரியவனே ,நான் உனக்கு காஷாய வஸ்திரங்களை (காவி வஸ்திரத்தை ) கொடுக்க விரும்புகிறேன். வரும் மாதத்தில் நீ எப்படியும் என்னை பார்ப்பாய் , இல்லையா? அப்போது நான் அவற்றை உன்னிடம் தருகிறேன் ”
என்றார்.
ரமண பாபாவுடன் செல்லும் சுவாமிஜிக்கு விடைகொடுக்க நான் பாபட்லா ரயில் நிலையம் வரை சென்றேன். சுவாமிஜி ரயிலில் ஏறும்போது, “சுவாமிஜி, தயவுசெய்து திரும்பி வாருங்கள்” என்று கெஞ்சினேன். அதற்கு சுவாமிஜி, “ பார்ப்போம்” என்று பதிலளித்தார். நான் ரமணா பாபாவிடம் ரூ .10 ஐ கொடுத்தேன் , மெட்ராஸிலிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு தந்தி அல்லது ஒரு தொலைபேசி அழைப்பு கொடுக்கச் சொன்னேன். அப்போது நான் அவர்களை ஓங்கோலில் சந்தித்து அவர்களுடன் ஜில்லெல்லமுடிக்கு பயணம் செய்யலாம் என்ற என் எண்ணத்தை முன் வைத்தேன் . இந்த வழியில் சுவாமிஜி தனது தபோஸ்தானத்திற்கு புறப்பட்டார். கனமான இதயத்துடனும், சுவாமிஜி திரும்பி வருவார் என்ற தீவிர நம்பிக்கையுடனும், நான் ஸ்ரீசைலம் புறப்பட்டேன்.
தொடரும்
Comentarios