ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பி.ஆர்.கே) ஆன்மீக முக்கியத்துவத்திற்கு புகழ்பெற்ற பல இடங்கள் இந்தியாவில் உள்ளன. அந்த இடங்களில், ஸ்ரீசைலம் தனக்கென ஒரு தனித்துவமான முக்கியத்துவத்தை வைத்திருக்கிறது என்று கூறலாம். இந்த இடம் 2 ஆம் நூற்றாண்டிலிருந்து பிரபலமாக உள்ளது. ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி உடனுறை ஸ்ரீ பிரம்மரம்பா தேவி தங்குமிடம் ஸ்ரீசைலம் என்று வரலாறு சொல்கிறது. ஸ்ரீசைலத்திற்கு அதன் முக்கியத்துவத்தை அளிக்கும் மற்றொரு முக்கிய காரணம் என்னவென்றால், அது ஒரு சக்திபீடமும் மற்றும் ஜோதிர்லிங்க ஸ்தலமும் ஆகும். கிருஷ்ணா நதி ஸ்ரீசைலம் வழியாக வடக்கு நோக்கி பாய்கிறது மற்றும் இந்த இடம் ஒரு காடுகளின் மத்தியில் ஒரு மலையின் மேல் அமைந்துள்ளது. தவம் செய்வதற்க்காக பல ரிஷிகள் கடந்த காலங்களில் இங்கு வந்துள்ளனர். ஒரு முறை ஸ்ரீசைலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய சுவாமிஜி, அஷ்டவக்ர மகரிஷி , அகஸ்திய முனிவர், தத்தாத்ரேய சுவாமி போன்ற பெரிய ரிஷிகள் பயணித்த இடம் இது என்று கூறினார். பாலதாரா-பஞ்சதாராவில், ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியார் சிவானந்த லஹரி எழுதியுள்ளார். அதில் சில ஸ்லோகங்கள் மூலம் ஸ்ரீசைலத்தின் முக்கியத்துவத்தையும் அவர் விவரிக்கிறார். எங்கள் ஆசிரமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு முறை ஸ்வாமிஜி பேசுகையில், ஒரு சாதகன் தன்னுடைய ஆன்மீக தேடுதலை ஒரு புனித இடத்திலோ அல்லது ஒரு நதி கரையிலோ அல்லது காடுகளுடன் மத்தியிலோ அல்லது குரு சன்னிதியிலோ செய்யும்போது, அந்த சாதகன் ஆன்மீக ரீதியில் மிக உயர்ந்த இடத்தை அடைவான் என்று கூறினார். மேற்கூறிய அனைத்தும் கூடிய இடத்தில எங்கள் ஆசிரமம் அமைந்துள்ளது மட்டுமல்ல, நம்முடைய பரமகுரு சன்னிதியும் (ஸ்ரீ ராகாடி பாபாவின் பாதுகைகள் ) அங்கு உள்ளது, இது நம் அனைவருக்கும் மிக பெரிய ஆசியாகும் . அத்தகைய சிறப்பைக் கொண்ட ஸ்ரீசைலம் போன்ற ஒரு இடத்திற்கு தினமும் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்களும் மற்றும் பயணிகளும் வந்து செல்கிறாரகள்.
ஒரு பயணி ஒருமுறை ஸ்ரீசைலத்தை பார்க்க வந்தார் , அவர் சுற்றியுள்ள இடங்களில் சுற்றுப்பயணம் செய்து செய்து விட்டு , ஹடகேஸ்வரத்திற்கு வந்தார். அந்த நேரத்தில், நான் உட்பட சில பக்தர்கள் அங்கு இருந்தோம் . அந்த பயணி சுவாமிஜியை பார்த்து பரம ஆனந்தம் அடைந்தார் .சுவாமிஜியை பற்றி மேலும் விவரங்கள் அறிய ஆர்வமாக,” சுவாமிஜி யார்” என்று வினாவினார் . அதற்கு பதிலாக , சுவாமிஜி ஒரு ஸ்துதி பாடினார்.
சுவாமிஜி அந்த ஸ்தூதியைப் பாடுவதை கேட்டு நாங்கள் அனைவரும் மிக்க ஆனந்தம் அடைந்தோம் . மிகுந்த மகிழ்ச்சியைடந்த அந்த பயணி, சுவாமிஜிக்கு முன்பாக ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டு தனது பயணத்தை மீண்டும் தொடந்தார் . இந்த ஆத்மாஸ்துதியை சுவாமிஜி பாடிய போது மூத்த சத்யநாராயணா காரு அதை எழுதி கொண்டார் . பின்னர், எங்களில் சிலரும் அந்த ஸ்துதியை எழுதிக் கொண்டோம் . சுவாமிஜி தமிழ் மொழியில் தன் கைபட ஆத்மாஸ்துதியை எழுதி தனது சிறு வயது நண்பரான ஸ்ரீ கிருஷ்ணா சங்கர் காருவிற்கு கொடுத்தார்.
தொடரும்
Jai Gurudev