top of page
Writer's pictureSriswamypoornananda.org

|| யதோ வசோ நிவர்த்தந்தே || - 22

ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பி.ஆர்.கே)


சுவாமிஜியின் அருளால், குருமதாவின் ஆரோக்கியம் முன்னேற்றம் கண்டது. அவர்களுடைய கண் பார்வையும் சிறிது சரியானதால், அவர்களால் இப்போது அவர்களுடைய எல்லா வேலைகளையும் செய்ய முடிந்தது . சுவாமிஜியும் குருமாதாவும் BHEL -ல் என் நண்பர் கே.பி.வி.ஜி காருவின் வீட்டில் இருந்தனர் BHEL இல் சுவாமிஜியின் தரிசனம் பெற்ற பலர் அவரது தீவிர பக்தர்களாக மாறினர் . சுவாமிஜியின் தரிசனத்திற்காக பக்தர்கள் கே.பி.வி.ஜி காருவின் வீட்டிற்கு அடிக்கடி செல்ல தொடங்கினர். நான் அப்போது நிஜாமாபாத்திற்கு அருகில் இருந்த போச்சம்பாடு ப்ராஜெக்ட்டில் பணிபுரிந்தேன். கோதாவரி ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த இந்த திட்டம் ஆரம்ப வளர்ச்சி நிலையில் இருந்தது. ஸ்ரீசைலத்தைப் போலவே, போச்சம்பாடுவிலும் ஒரு ப்ராஜெக்ட் காலனி கட்டப்பட்டது. இந்த காலனியில் ஒரு ராமர் கோயில் இருந்தது. நான் சுவாமிஜியை நினைத்துக்கொண்டே என் நாட்களை கழித்தேன் . எனக்கு அவகாசம் கிடைத்த போதேல்லாம் ஹைதராபாத் சென்றுசுவாமிஜியை தரிசனம் செய்து வந்தேன்.


 

சுப்பாராவ் காரு என்ற ஒரு கண்காணிப்பாளர் போச்சம்பாடுவில் என் அருகாமையில் வசித்து வந்தார். அவர் ஆழ்ந்த மத பற்று உடையவரும் மற்றும் கடவுளுக்கு பயந்த மனிதரும் கூட . அவர் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்து ருத்ரம் மற்றும் பஞ்சஸூக்தம் கற்று கொடுக்க முன் வந்தார். நான் அதை கற்று கொள்ள அத்தனை ஆர்வத்துடன் இருக்க வில்லை, ஆனால் என்னால் அவரது கோரிக்கையை நிராகரிக்க முடியவில்லை என்பதால், ருத்ரம் மற்றும் பஞ்சஸூக்தம் ஆகியவற்றை சுப்பாராவ் காருவிடம் கற்றுக்கொண்டேன். இவரது தந்தை கோபால் ராவ் சிறந்த சிவ பக்தர். கோபால ராவ் காரு , நான் சுப்பாராவ் காருவிடம் இருந்து பஞ்ச ஸூக்தம் கற்றுக் கொண்டிருந்த நேரத்தில் போச்சம்பாட்டுக்கு வந்தார்கள் . கோபால் ராவ்காரு , தான் தினமும் வழிபட்டு வந்த சிவலிங்கத்திற்கு மஹாலிங்கபிஷேகம் செய்வது நல்லது என்று கூறினார். அவர்களின் வீட்டில் அந்த நிகழ்ச்சியை நடத்துவது சாத்தியமில்லை என்பதால், எங்கள் வீட்டில் மகாலிங்கபிஷேகம் செய்ய வேண்டுகோள் விடுத்தார் . இந்த ஆலோசனையால் நானும் மகிழ்ச்சியடைந்தேன், எங்கள் வீட்டில் மகா-ருத்ராபிஷேகத்திற்கு ஒரு அறையை தயார் செய்தேன். அந்த வகையில், பல நாட்கள் அந்த அறையில் மகா-ருத்ரபிஷேகம் செய்யப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு அந்த நிகழ்ச்சி முடிவடைந்தது , நான் பணியிடத்தில் இருந்தபோது, ​​ஒரு ஜீப் என் அலுவலகத்தின் முன்பாக வந்தது. சுவாமிஜி மற்றும் குருமாதா அந்த ஜீப்பிலிருந்து இறங்கினர் . என் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்க வில்லை . உடனே, நான் அவர்களை என் வீட்டிற்கு அழைத்து சென்று தேவையான ஏற்பாடுகளை செய்தேன். சுவாமிஜி மற்றும் குருமாதாவும் இப்போது ருத்ராபிஷேகம் செய்யப்பட்ட அந்த அறையில் வசித்து வந்தனர்.


சடையுடன் கூடிய ஜடா முடியுடன் கௌபீனம் அணிந்த ஒரு துறவி காலனிக்கு வந்துள்ளார் என்பதை அறிந்ததும், பலர் சுவாமிஜியின் தரிசனத்திற்கு வந்தனர் . அந்த நபர்களில் சிலர் பின்னர் சுவாமிஜியின் தீவிர பக்தர்களாக மாறினர். அவர்களில் ஸ்ரீ கிஷன்ராவ் காரு மற்றும் ஸ்ரீ கே.வி.ஜி கிருஷ்ணமூர்த்தி காரு ஆகியோரின் குடும்பங்களும் இருந்தன. எனது அலுவலக சகாக்கள் பலருக்கும் சுவாமிஜியின் தரிசனம் கிடைத்தது . எனது அலுவலகத்தில் பணிபுரிந்த ஸ்ரீ பாகய்யா காரு என்ற பிரதேச அதிகாரி ஸ்ரீ மெஹர் பாபாவின் பக்தர். சுவாமிஜி பற்றி கேள்விப்பட்டதும், ஸ்ரீ பாகய்யா காரு எங்கள் வீட்டிற்கு வந்த போது சுவாமிஜி ஸ்ரீ மெஹர் பாபா வடிவத்தில் அவருக்கு தரிசனம் கொடுத்தார். சுவாமிஜியால் அவ்வாறு ஆசிர்வதிக்க பட்ட பிறகு, ஸ்ரீ பாகய்யா காரு சுவாமிஜியின் கால்களைப் பிடித்து கொண்டு மகிழ்ச்சியில் அழுதார்.


சுவாமிஜி மற்றும் குருமாதாவின் விருப்பத்திற்கேற்ப சமைப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது. அவர்கள் இருவரும் தமிழ் பாணியில் உணவு வகைகளை விருப்பினார்கள் , அதே நேரத்தில் எங்கள் சமையல் பெரும்பாலும் ஆந்திராவை அடிப்படையாகக் கொண்டிருந்தது . சுவாமிஜி மற்றும் குருமதாவின் விருப்பங்களை அறிந்த தமிழ்நாட்டிலிருந்து யாராவது ஒருவர் இருப்பது நல்லது என்று நான் நினைத்தேன் . நாங்கள் தமிழ்நாட்டில் சுற்று பயணம் செய்த நேரத்தில் சுவாமிஜியின் குழந்தை பருவ நண்பர்களில் ஒருவரை கல்லிடைகுறிச்சியில் சந்தித்ததும், எனக்கு நினைவிருந்தது. அவருக்கு சுவாமிஜியிடம் ஆழ்ந்த அன்பும் மரியாதையும் இருந்தது . அவரை போச்சம்பாட்டுக்கு அழைக்கலாம் என்றும் அவர் சுவாமிஜிக்கு மற்றும் குருமாதாவிற்கு சமைக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டேன். என் கோரிக்கையை சுவாமிஜி ஏற்றுக்கொண்ட பிறகு, நான் உடனடியாக கல்லிடைகுறிச்சியில் இருந்த நண்பரை அணுகினேன். அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் , சுவாமிஜிக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்க பெற்றதால் போச்சம்பாட்டுக்கு வந்தார். சுவாமிஜிக்கு சேவை செய்ய போச்சம்பாட்டுக்கு வந்த நண்பர் வேறு யாருமல்ல, அவர் எங்களுக்கு நல்ல அறிமுகமான ஸ்ரீ கிருஷ்ண சங்கர் காரு தான் . கிருஷ்ண சங்கர் காரு சுவாமிஜி மற்றும் குருமாதாவின் உணவு பழக்கங்களை கவனித்துக்கொண்டதுடன் , ​​அவர் எங்களுடன் பழகி கலந்து எங்கள் குடும்பத்தின் ஒரு நபராக ஆனார்.


சுவாமிஜியை தரிசனம் செய்த பிறகு, அனைவரும் மீண்டும் மீண்டும் சுவாமிஜியைப் பார்க்க ஆசைப்பட்டனர். அந்த வகையில், போச்சம்பாடு ப்ராஜெக்ட் காலனியில் வசிப்பவர்கள் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். அவர்களைத் தவிர, ஹடகேஸ்வரத்தில் சுவாமிஜியின் தரிசனம் செய்த ஸ்ரீசைலம் ப்ராஜெக்ட் காலனியைச் சேர்ந்தவர்களும், கே.பி.வி.ஜி காரு BHEL வீட்டில் சுவாமிஜியை தரிசனம் செய்த மக்களும் போச்சம்பாடுவிற்கு வரஆரம்பித்தனர். ஒரு நாள், என் நண்பர் கே.பி.வி.ஜி காரு , போச்சம்பாடுவிலுள்ள எனது அலுவலகத்திற்கு வந்தார். அவர் தனது வேலையை ராஜினாமா செய்ததாகவும்,சுவாமிஜியின் ஆசியால் தனக்கு கிடைத்த தன்னுடைய முழு வாழ்க்கையையும் சுவாமிஜின் சேவையில் கழிக்க முடிவு செய்ததாகவும் கூறினார். கே.பி.வி.ஜி காருவிற்கு பி.எச்.இ.எல் -இல் சிறந்த வேலையில் இருந்தார் , போக மிகச் சிறிய குழந்தைகளுடன் திருமணமான மனிதரும் கூட . இதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். வேலை இல்லாத அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நிதி நெருக்கடி ஏற்படக்கூடும் . எதிர்காலத்தைப் பற்றி எந்த ஒரு சிந்தனையோ, கவலையோ இல்லாமல், ஒரு சிறந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்து விட்டு, எதிர் காலத்தை பற்றி எந்த ஒரு கவலையும்படாமல் சுவாமிஜியின் மீது மட்டும் முழு நம்பிக்கை வைத்து வாழ்கை நடத்த எல்லோராலும் முடியாது . இந்த வழியில், கே.பி.வி.ஜி காரு சுவாமிஜியின் தெய்வீக அருளுக்கு மிக குறுகிய காலத்திற்குள் நெருக்கமானார் .


ஏப்ரல் 1969 முதல், எங்கள் வாழ்க்கை அனைத்தும் மாறியது. நாங்கள் அதை அறிவதற்கு முன்பு, சுவாமிஜியின் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது . ஒரு வருடத்தில், பல குடும்பங்கள் சுவாமிஜியின் சன்னிதியின் அந்த புனித பாதங்களினால் ஆசீர்வதிக்கப்பட்டனர் . இதுபோன்ற பல குடும்பங்களின் சுவாமிஜியுடன் கூடிய அனுபவங்களை பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது . சுவாமிஜியின் தெய்வீக வடிவத்தையும், அவரது புகழ்பெற்ற வாழ்க்கை முறையையும், அவரை சுற்றி எப்போதும் வளர்ந்து வரும் பக்தர்களையும் பார்த்தபோது, ​​சுவாமிஜி இந்த உலகத்தில் உள்ள ஜீவன்களை ரக்ஷிப்பதற்காகவே அவதாரம் எடுத்துள்ளார் என்று நாங்கள் நம்பினோம் .


போச்சம்பாடு, ஸ்ரீ சுவாமிஜியுடன் சில பக்தர்கள், 1970.
 

தொடரும்







62 views0 comments

Comments


bottom of page