ஓம் நமோ பகவத்தே ஸ்ரீ பூர்னானந்தாய
ஸ்ரீ பூர்னானந்த சுவாமி, குருமாதாவுடன் கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள போச்சம்பாடு திட்ட காலனியில் உள்ள எங்கள் வீட்டில் வந்து தங்கினார்கள் . மிகக் குறுகிய காலத்தில் ஸ்ரீ சுவாமியின் நெருங்கிய சீடரான எனது நண்பர் கே.பி.வி.ஜி கிருஷ்ண மூர்த்தியும் தன து வேலையை விட்டுவிட்டு, ஸ்ரீ சுவாமிஜி அவர்களுக்கு சேவை செய்யவேண்டி போச்சம்பாடு காலனிக்கு குடியேறினார் . ஸ்ரீ சுவாமி அவர்களின் சிறுவயது நண்பரான ஸ்ரீ கிருஷ்ண சங்கர் காருவை ,ஸ்வாமிஜிக்கும் அவர் தாயாருக்கும் அவர்கள் விரும்பும் மாதிரி ருசியாக சமைத்து தருவார் என்ற எண்ணத்துடன் போச்சன்பாட்டுக்கு அழைத்தார், போச்சம்பாடில் கூட, குறுகிய காலத்தில் போச்சம்பாடில் வசித்தவர்கள் ஸ்வாமிஜியின் பக்தர்களாக ஆயினர் . ஒவ்வொரு இரவும் ஸ்ரீ சுவாமி திட்டக் காலனியிலிருந்து கோதாவரி ஆற்றங்கரை ஓரமாக நடந்து செல்வார். கோதாவரியின் கரையின் அருகாமையில் எங்கள் திட்ட காலனியின் இருந்ததால், அங்குள்ள வானிலை சூரிய அஸ்தமன நேரத்தில் மிகவும் அமைதியாகவும் இனிமையாகவும் இருக்கும் . அத்தகைய சூழலில், ஸ்ரீ சுவாமிஜி இரவில் கோதாவரியின் கரையில் நடப்பார் . அருகில் இருந்த ஒரு பெரிய மரத்தின் கீழ் அமர்ந்திருப்பார்கள் . சில நேரங்களில் எங்களையும் அவர்களுடன் அழைத்துச் செல்வார்கள்.
- பி ராதாகிருஷ்ணமூர்த்தி (பி.ஆர்.கே)
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு பௌர்ணமி இரவில் ஸ்ரீ சுவாமிஜி ஒரு சிறிய கூட்டத்தை தன்னுடன் அந்த பெரிய மரத்திற்கு அழைத்துச் சென்றார். கோதாவரியின் கரையில், அந்த பௌர்ணமி இரவில், ஸ்ரீ சுவாமிஜி முன்னிலையில் எங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது . ஸ்ரீ சுவாமிஜி , " பௌர்ணமி இரவில் ஸ்ரீசுக்தத்தை படிப்பது மிகவும் சிறந்தது " என்று சொன்னபோது நான் ஸ்ரீசுக்தத்தை சொல்ல ஆரம்பித்தேன். ஸ்ரீ சுவாமிஜி முன்னிலையில் அவர்களைப் பார்த்து கொண்டே ஸ்ரீ சுக்தத்தை பாராயணம் செய்து கொண்டிருந்ததால் எனக்கு நேரம் போனதே தெரிய வில்லை . சிறிது நேரம் கழித்து மழை தூறினார் போல் இருந்தது .வியக்கும் வகையில் நாங்கள் அமர்ந்திருந்த மரத்தின் கீழ் மட்டும் மழை தூவினார் போல் இருந்தது .ஆச்சரியப்படும் விதமாக, நாங்கள் உட்கார்ந்திருந்த பெரிய மரத்தைத் தாண்டி ஒரு மழை துளி கூட எங்களை சுற்றி எங்கும் விழவில்லை. அந்த பெரிய மரத்திலிருந்து தூறல் விழுகிறது என்ற உணர்வு எங்கள் அனைவருக்கும் இருந்தது. இவ்வளவு பெரிய செயலைச் செய்த புகழ்பெற்ற ஸ்ரீ சுவாமிஜி ,ஒன்றுமே அறியாதவர் போல் அப்பாவியாக ஒரு புன்னகையுடன் எங்களைப் பார்த்தார். ஸ்ரீ சுவாமிஜி ஸ்ரீசுக்தம் பற்றி எப்போதுமே மிகவும் உயர்வாக சொல்லிக்கொண்டிருப்பார் .
"ஸ்ரீ சுக்தமேகமேகாந்தே சர்வபிஷ்டாம் பிரயாச்சட்டி"
என்று, ஸ்ரீ சுவாமிஜி எப்போதும் சொல்வார்கள்.
ஸ்ரீ சுவாமியின் எப்போதும் தனித்து இருப்பதை விரும்பியதால் , சம்சாரியான என்னுடனும் தங்குவதற்கு அவருக்கு சிக்கல் இருப்பதாக எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது. தனிமையில் நேரம் செலவிட அவருக்கு ஒரு சிறிய ஆசிரமம் போன்ற ஒன்றை அமைத்தால் நல்லது என்று எனக்கு தோன்றியது . எங்கள் திட்டத்தில் எனது மேலதிகாரிகள் ஸ்ரீ சுவாமிஜி யைப் தரிசிக்கும் நல்ல அதிர்ஷ்டத்தையும் பெற்றிருந்தனர் , எனவே எனது யோசனை வடிவம் பெறுவது எளிதானது. எங்களுக்கு மேலே உள்ள அதிகாரியிடம் பேசுகையில், ஸ்ரீ சுவாமிஜி அவர்களின் குழந்தை பருவ நண்பர் கிருஷ்ணா சங்கர் காரின் பெயரில் சிறிது இடத்தை ஒதுக்கினார். அங்கு பணிபுரியும் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சில பக்தர்களின் உதவியுடன் ஸ்ரீ சுவாமிஜி அவர்களுக்காக ஒரு சிறிய ஆசிரமத்தை கட்டினார். ஆசிரமத்தில், வீட்டின் கிரஹப்பிரவேசம் மற்றும் குரு பிரவேசம் ஆகியவை வேத பாராயணங்களுடன் பிரமாண்டமாக நடந்தன. போச்சம்பாடு பக்தர்கள் குழுவுடன், ஸ்ரீசைலம் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுவாமியின் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஸ்ரீ சுவாமியுடன், குருமாதா மற்றும் கிருஷ்ணா சங்கர் ஆகியோர் ஆசிரமத்தில் குடியேறினர். எனது நண்பர் கே.பி.வி.ஜி கிருஷ்ண மூர்த்தியும் ஹைதராபாத்தில் சில நாட்களும், ஸ்ரீ சுவாமியின் சேவையில் சில நாட்களும் அடிக்கடி ஆசிரமத்திற்கு வந்து செல்வது வழக்கம்.
ஒரு நாள் நாங்கள் ஹடகேஸ்வரத்தில் தங்கியிருந்தபோது, ஸ்ரீ சுவாமிஜி எங்களுடன் சிறிது நேரம் இருந்தபோது, "சுவாமி, இந்த மந்திரங்களும் தந்திரங்களும் எனக்கு தெரியாது . ஆனால் காரியசித்தி விரைவாக நிறைவேற்ற ஏதாவது வழி இருக்கிறதா?" நான் ஒரு முறை கேட்டேன் . அதற்கு சுவாமிஜி , "அகஸ்திய மகரிஷி கொடுத்த சாஸ்திரம் இருக்கிறது " என்றார் .அங்கு இருந்த கே.பி.வி.ஜி கிருஷ்ண மூர்த்தி காருவும் சுவாமிஜி யிடம் விவரங்களைக் கேட்டார். ஸ்ரீ சுவாமிஜி சில வசனங்களை ஓதும்போது. எனக்கு அவை புரிய வில்லை. ஸ்ரீ சுவாமிஜி அதைப் பற்றி விளக்கினார், "இது ஒரு யந்திரம். இது புவனேஸ்வரி காகக்ஷ்யபுடிக்கி க்கு சொந்தமானது. என் குழந்தை பருவத்தில் , என் தந்தை எனக்கு இந்த வித்தையை பயிற்றுவிட்டார் “ என்று கூறினார். "அந்த யந்திரத்தை எப்படி செய்வது என்று நான் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஸ்ரீ சுவாமிஜி யந்திரத்தை ஒரு துண்டு காகிதத்தில் வரைந்தார் . எவ்வாறாயினும், செப்புப் படலத்தில் இந்த யந்திரத்தை செய்தால் அது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று ஸ்ரீ சுவாமிஜி எங்களிடம் கூறினார். இந்த விஷயத்தைப் பற்றி போச்சம்பாடுவில் உதவி பொறியாளராக பணிபுரிந்த நாராயண ராவிடம் தெரிவித்தேன் . பின்னர் அவர் ஒரு நல்ல செப்பு தகடு தயார்செய்தார்.
எங்களுக்கு செப்பு தகடு கிடைத்தது, ஆனால், இந்த யந்திரத்தை இப்போது செப்பு படலத்தில் யார் வரைவார்கள் என்று என் மனதில் ஒரு கேள்வி தொடங்கியது. நாராயண ராவ் செப்பு தகடில் செதுக்குபவர்கள் இருப்பார்கள் என்று சொன்னார், மேலும் அவர் செதுக்குபவர் ஒருவரையும் அழைத்து வந்தார் . அந்த செதுக்குபவர் காகிதத்தில் வரையப்பட்ட யந்திரத்தைப் பார்த்துவிட்டு, செப்புப் தகட்டில் வரைவது சாத்தியமில்லை என்று கூறி விட்டுச் சென்று விட்டார் , இது மிகவும் கடினமான பணி. இருப்பினும், வேலைப்பாட்டிற்கு பயன்படுத்தும் மின்சார பேனாவை நான் அவரிடமிருந்து வாங்கி கொண்டேன் .
சிறிது காலம் கழித்து நாங்கள் அனைவரும் யந்திரத்தை மறந்துவிட்டோம். அந்த செப்பு தகடும் ஆஸ்ரமத்தின் ஒரு மூலையில் இருந்து விட்டது. சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள் விடியற்காலையில் நான் ஸ்ரீ சுவாமியைப் பார்க்க ஆசிரமத்திற்குச் சென்றேன். அதே நேரத்தில் 5 வயது குழந்தை அஙகு வந்தது . அந்த குழந்தை யார் என்று எனக்கு தெரியாது. அந்த காலனியில் அந்த குழந்தையை நான் பார்த்ததும் இல்லை. குழந்தை ஸ்ரீ சுவாமிஜி அவர்களுக்கு அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, மூலையில் ஒரு செப்புப் தகடை பார்த்து விட்டு “அது என்ன ?” என்று கேட்டது .ஸ்வாமிஜி உடனே “நீ யார்? உன் பெயர் என்ன ?” என்று கேட்டார். “என் பெயர் புவனேஸ்வரி”, என்று ஒரு புன்னகையுடன் அந்த குழந்தை பதில் அளித்தது. அந்த செப்பு தகடை காட்டி ஸ்வாமிஜி “உன் படத்தை அதன் மேல் வரையலாம், நீ இங்கேயே இருக்கிறாயா?” என்று கேட்டார். அந்த குழந்தையும் மிக உற்சாகமாக சம்மதித்தது .அப்போது அக் குழந்தையை தேடி கொண்டு வந்த அக் குழந்தையின் பெற்றோர் ஆஷ்ரமத்திற்குள் வந்து குழந்தையை அழைத்து சென்றுவிட்டனர்.
உடனே ஸ்வாமிஜி அந்த செதுக்குபவரிடம் இருந்து வாங்கிய எழுத்தாணியை கொண்டு வரும் படி கூறினார். காலம் தாழ்த்தாமல் ஸ்வாமிஜி அந்த தகடு மீது யந்திரத்தை வரைய ஆரம்பித்தார். அந்த தெய்வீக அற்புதத்தை புரிவதற்கு ஸ்வாமிஜி கீதா மாதா மற்றும் கிஷன் ராவ் காரு வீட்டை தேர்தெடுத்தார்.ஸ்வாமிஜி யந்த்ரம் வரைந்து கொண்டிருந்த அந்த நாட்களில் அவர்கள் வீட்டில் பல அதிசய நிகழ்வுகள் நடந்தன.அதை வரைந்து முடிப்பதற்குள் சுவாமிஜியின் கண்கள் கோவை பழமாக சிவந்து விட்டன. அப்போதிருந்து எல்லோரையும் தங்கள் கஷ்டங்களையும், ஆசைகளையும் பாபாவின் பாதுகை மற்றும் புவனேஸ்வரி அம்மாவின் யந்த்ரம் இடத்திலும் கூறி வேண்டி கொள்ளும் படி ஸ்வாமிஜி கூறினார்.
ஸ்ரீ பூர்ணானந்தா ஸ்வாமிகள் தன் கைப்பட வரைந்த அந்த புவனேஸ்வரி யந்த்ரமானது இவுலகை ஆளும் ஸ்ரீ புவனேஸ்வரி தாயாரின் உண்மையான படிவமாகும் .ஸ்ரீ பாபாவின் பாதுகைகளுடன், புவனேஸ்வரி தாயாரும் அந்த யந்திரத்தில் குடிகொண்டு இப்போது ஆசிரமம் பாபா ஹாலில் உள்ளார்.
தொடரும்
Comments