ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பி.ஆர்.கே) நாங்கள் வியாழக்கிழமை தபோவனத்திலிருந்து புறப்பட்டு அருணாசலம் அருகே பூண்டி என்ற கிராமத்திற்கு சென்றோம். அந்த நேரத்தில், பூண்டியில் ஒரு பெரிய துறவி தங்கியிருந்தார்.
அவரது பெயர் மற்ற எந்த விவரங்களும் யாருக்கும் தெரியாது, அவரை பூண்டி சுவாமி என்று அழைத்தார்கள் . பூண்டி சுவாமி நிறைய இடங்களுக்கு சென்று விட்டு , இறுதியாக 1962 இல், பூண்டியை அடைந்தார், ஒரு வீட்டிற்கு வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்து அவர் சமாதி நிலைக்கு சென்று விட்டார் . அவர் பசி, தாகம், தூக்கம் மற்றும் பிற உடல் செயல்பாடுகளில் இருந்து விலகினார். யாராவது பக்தர் அவருக்கு உணவளிக்கும் போது மட்டுமே அவர் சாப்பிடுவார். யாராவது அவருடன் உரையாடலை தொடங்காவிட்டால், அவர் பேசமாட்டார். சுவாமிஜியின் ஆசீர்வாதத்துடன், இவ்வளவு பெரிய துறவியின் தரிசனம் எங்களுக்கு கிடைத்தது. சுவாமிஜி பூண்டி சுவாமியை அணுகும்போது, அவர் கண்களைத் திறந்து சுவாமிஜியை பார்த்தார். அவர்களுக்கு இடையே ஒரு அமைதியான உரையாடல் நடந்தது . பூண்டியில் சிறிது நேரம் கழித்துவிட்டு, நாங்கள் அருணாசலம் புறப்பட்டோம்.

அருணாசலத்திலிருந்து எங்கள் பயணத்தைத் தொடர போதுமான பணம் எங்களிடம் இல்லை. என்ன நடக்கும், சுவாமிஜி என்ன செய்வார் என்று யோசித்தேன், இதற்கிடையில், திருச்சியில் ஒரு அரசு வழக்கறிஞராக பணிபுரியும் ஒருவர் சுவாமிஜியின் தரிசனம் செய்ய வந்தார். கார்த்திகை மாதம் புனித மாதம் என்பதால் அவர் அருணாசலம் சென்று கொண்டிருந்தார், சுவாமிஜியை பற்றி அறிந்ததும், சுவாமிஜி திருச்சியில் உள்ள தனது வீட்டிற்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திருச்சிக்கு பயணிக்க எங்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அவர் முன்வந்தார். பல முக்கியமான மற்றும் புராதான ஆன்மீக வழிபாட்டு இடங்கள் தமிழகத்தில் இருக்கின்றன . அந்த இடங்களில் ஒன்று திருச்சிக்கு அருகில் உள்ள ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாத சுவாமியின் கோயில். மற்றொரு இடம் திருச்சியில் ஒரு மலையின் மேல் அமைந்துள்ள மலைகோட்டை விநாயகர் கோயில்.
பணம் இல்லாமல் மேற்கொண்டு எப்படி பயணம் செய்வோம் என்று நான் யோசித்து கொண்டிருந்த போது , சுவாமிஜியின் ஆசிர்வாதத்தால் அந்த அரசு வழக்கறிஞர் சுவாமிஜியின் தரிசனத்திற்காக வந்தார். எங்கள் பயண ஏற்பாடுகள் அனைத்தையும் செய்த அவர், தனது சொந்த வீட்டிலும் தங்க எங்களுக்கு இடமளித்தார். சுவாமிஜி முதலில் எங்களை மலைக்கோட்டை விநாயகர் கோயிலுக்கு அழைத்து சென்றார், இது ஒரு சிறந்த வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும் . மேலும், சுவாமிஜியின் குழந்தை பருவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இந்த கோயிலுடன் தொடர்புடையது, இது சுவாமிஜி அவர்களே எனக்கு கூறினார்.
சுவாமிஜியின் தந்தை ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரி காரு சுவாமிஜியின் முதல் குரு ஆவார், மேலும் அவர் சுவாமிஜியை அவரது குழந்தை பருவத்திலிருந்தே ஆன்மீக பாதையை நோக்கி நடத்தினர் . ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரி காரு மறு பிறப்பு என்ற பந்தத்திற்கு அப்பாற்பட்டவர் தான் உண்மையான தந்தை என்றும், அந்த தந்தையை அடைய நாம் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தை சுவாமிஜியின் இளம் பருவத்திலேயே புகுத்தினார். கார்த்திகை பொர்ணமி நன்னாளில் ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரி காரு அவர்களால் சுவாமிஜிக்கு மந்த்ரஉபதேசம் தொடங்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டின் கார்த்திகை பௌர்ணமியில் , ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரி காரு அப்போது 10 வயதாக இருந்த சுவாமிஜிக்கு கணபதி உபதேசத்தை வழங்கினார். கணபதி மந்திரத்தின்” பாவா-சாதனா” செய்யும் போது, சுவாமிஜி ஒவ்வொரு உயிருள்ள மற்றும் உயிரற்ற யிரினங்களையும், தன்னையும் கணபதி தத்துவத்துடன் அடையாளம் படுத்தி கொண்டார் . அந்த வகையில், அவருடைய உலகம் முழுவதும் கணபதி தத்துவத்தால் நிறைந்திருந்தது . (சிருங்கேரியில் தனது முதல் குருவால் அறிவுறுத்தப்பட்டபடி ஸ்ரீ ஓமகரானந்த சுவாமியும் பாவா-சாதனாவைக் கடைப்பிடித்தார் என்று சுவாமிஜி பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்). ஒரு 10 வயது சிறுவன் மட்டுமே என்பதால், சுவாமிஜி தன்னிலை மறந்த த்யானம் போன்ற நிலைக்கு சென்று, தனது வீட்டை விட்டு வெளியேறி மலைக்கோட்டை விநாயக சுவாமி கோவிலை அடைந்தார். பசியையும் தூக்கத்தையும் முற்றிலும் துறந்து சுவாமிஜி கோயிலில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார். கோயிலுக்கு வந்த பக்தர்களால் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்த அந்த சிறுவனின் மீதிருந்து கண்களை எடுக்க முடியவில்லை.அங்கு வந்த பக்தர்களில் ஒருவர் ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரி காருவை அறிந்தவர். சுவாமிஜியை அடையாளம் கண்டு கொண்ட அவர் , சுவாமிஜியுடன் மீண்டும் சாத்தூருக்கு சென்று நடந்த சம்பவத்தை ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரி காருவிற்கு விவரித்தார்.
ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரி காரு எதிர்காலத்தில், சுவாமிஜி தவம் செய்ய வேண்டி எல்லோரிடமிருந்தும் விலகியிருக்க வேண்டியிருக்கும் என்றும், அந்த நேரம் வரும் வரை, அவர் தனது குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் . அந்த வகையில், சுவாமிஜி தனது தந்தைக்குக் கீழ்ப்படிந்து, மக சிறிய வயதிலேயே குடும்ப பொறுப்புகளை ஏற்று கொண்டார்.
சுவாமிஜியுடன் மலைக்கோட்டை விநாயகர் கோவிலில் ஒரு சிறந்த அனுபவம் பெற்ற பிறகு, மறுநாள் ஸ்ரீரங்கத்திற்கு சென்றோம்.
தொடரவும்
Comments