ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பி.ஆர்.கே)
எங்கள் தமிழக சுற்றுப்பயணத்தில், சுவாமிஜியின் ஆசீர்வாதத்துடன், பல புனித ஸ்தலங்கள் மற்றும் மகான்களின் தரிசனம் எங்களுக்கு கிடைத்தது . நாங்கள் சென்ற ஒவ்வொரு கோயில், மடம் மற்றும் ஆசிரமத்திலும் சுவாமிஜி மிக சிறந்த முறையில் வரவேற்க பட்டார் , இது சுவாமிஜியின் உயர்ந்த அந்தஸ்தின் நிலையயை காட்டியது . இந்த உலகத்தின் செயல்பாட்டிற்கு பொறுப்பான கடவுள் ஒரு எளிய கௌபீனம் உடையணிந்து, அவருடைய வாழ்க்கை கதையை எங்களுக்கு காண்பித்து கொண்டிருந்தார், அதே நேரத்தில் எங்களை நன்கு கவனித்து கொண்டதோடு , எங்களுக்கு ஒரு குறையும் இல்லாதவாறு பார்த்து கொண்டார் . நாங்கள் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் சந்தேகத்திற்கும், அவர் மிகவும் பொறுமையாக இருந்து , அவற்றை அனுபவங்களின் வடிவத்தில் தெளிவுபடுத்தினார். சுவாமிஜியின் உயரிய தனித்துவத்தை புரிந்து கொண்ட பல பெரிய மகான்களும் யோகிகளும், அவரவர் ஆசிரமங்களில் சுவாமிஜியை இருக்கும்படி அவரை கேட்டுக்கொண்டனர். இது போன்ற பல சம்பவங்களை நான் கண்ணுற்றேன் . இருப்பினும், சுவாமிஜி தாழ்மையுடன் அவர்களுடைய அழைப்பை நிராகரித்தார்,சுகமான வாழ்வை துறந்து எளிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார்.
இத்தகைய தெய்வீக மகான் பிறக்க, ஒரு பெரிய யாகம் செய்யப்பட்டது. மதுரையில், ஆசீர்வதிக்கப்பட்ட தம்பதிகள் ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரி காரு மற்றும் பார்வதவர்தினி ஒரு மகனின் பிறப்புக்காக காமேஸ்வர காமேஸ்வரி யாகத்தை நிகழ்த்தினர். அந்த யாகம் சுமார் சுமார் ஒரு வருட காலம் நீடித்தது . பணமும் நிறைய செலவானது . ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரி காருவின் குரு ஸ்ரீ நீலகண்ட தீட்சதர் மற்றும் பர்வததாரிணியாரின் தந்தை த்ரிகாலஞானி ஸ்ரீ பாரதி சுவாமி ஆகியோரின் வழிகாட்டுதலில் இந்த யாகம் செய்யப்பட்டது. அத்தகைய யாகம் செய்யப்படுவதை அறிந்ததும்,அதை பார்பதற்க்காக நாடு முழுவதும் இருந்து பல மகான்கள் மதுரைக்கு வருகை தந்தனர். இந்த வழியில், புத்ரகாமேஷ்டி யாகம் முடிவுற்ற நிலையில் ,1939 நவம்பர் 1 ஆம் தேதி, ஸ்ரீ பூர்னானந்த சுவாமியின் பிறப்பால் இவ் உலகம் ஆசீர்வதிக்கப்பட்டது. அவருக்கு ஸ்ரீ காமேஸ்வரம் என்று நாமகரணம் செய்ய பட்டது .
சுவாமிஜி மதுரை 7 கடல் தெருவில் பிறந்தார். ஸ்ரீ பிரம்மானந்த சுவாமியின் மடம் மதுரையில் உள்ளது, இது பின்னர் சுவாமிஜியின் தாய்வழி தாத்தா ஸ்ரீ பாரதி சுவாமி தலைமைக்கு வந்தது . முதலில் ஸ்ரீ சங்கரநாராயணன் என்று பெயரிடப்பட்ட ஸ்ரீ பாரதி சுவாமிக்கு ஒரு சிறந்த வரலாறு உண்டு. ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த இவர், தன் இளம் வயதில் மதுரையில் உள்ள ஸ்ரீ பிரம்மானந்த சுவாமியின் சன்னிதியை அடைந்தார். ஸ்ரீ பிரம்மானந்த சுவாமியை தனது குருவாகக் நினைத்து , ஸ்ரீ பாரதி சுவாமி பல ஆண்டுகளாக பீடத்தின் சமையலறையில் பணியாற்றினார். ஸ்ரீ பிராமணந்த சுவாமி ஸ்ரீ பாரதி சுவாமியின் திருமணத்தையும் நடத்தி வைத்து , இந்த திருமணம் உலகிற்கு பயனளிக்கும் என்று முன்னறிவித்தார். ஸ்ரீ பிராமணந்த சுவாமி தனக்கு அடுத்து ஸ்ரீ பாரதி சுவாமியை பீடத்திற்கு தலைமை தாங்க தேர்வு செய்தார். நயன தீக்ஷா என்ற நுட்பத்துடன், ஸ்ரீ பிராமணந்த சுவாமி தனது ஞானத்தையும் சக்திகளையும் ஸ்ரீ பாரதி சுவாமிக்கு ஒரே இரவில் மாற்றுவித்தார் . ஸ்ரீ பிராமணந்த சுவாமி மகாசாமதி அடைந்த பிறகு, பீடத்தில் இருந்த பல அறிஞர்கள் ஸ்ரீ பாரதி சுவாமியின் திறன்களை குறித்து கேள்வி எழுப்பினர். சிறிது காலத்திற்கு, நாடு முழுவதிலுமிருந்து பல வேத பண்டிதர்கள் ஸ்ரீ பாரதி சுவாமியுடன் விவாதங்களில் பங்கேற்றனர், அவர்கள் அனைவரும் அவரது புத்திசாலித்தனம் மற்றும் மற்ற திறன்களை சோதிக்க விரும்பினர் . அவர்கள் அனைவரும் ஸ்ரீ பாரதி சுவாமியின் திறமையையும் புத்திசாலிதனத்தையும் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். ஸ்ரீ பாரத சுவாமி ஸ்ரீ பிரேமானந்தா சுவாமியின் உண்மையான வாரிசு என்பதை அவர்கள் உணர்ந்து மன்னிப்பு கோரினர்.
ஸ்ரீ ரங்கநாத சுவாமியின் கோவிலில் எங்கள் தரிசனம் முடிந்ததும், சுவாமிஜி ராஜு காருவையும் என்னையும் மதுரைக்கு அழைத்துச் சென்றார். சுவாமிஜி அவர் பிறந்த 7 கடல் தெருவில் உள்ள அவர் பிறந்த வீட்டிற்கும், ஸ்ரீ பிரம்மானந்த சுவாமியின் பீடத்திற்கும் எங்களை அழைத்துச் சென்றார். சுவாமிஜி புத்ரகாமேஷ்டி யாகம் மற்றும் ஸ்ரீ பாரதி சுவாமியின் கதைகளை விவரித்தபோது, அந்த நேரத்தில் அது எங்கள் கண் முன்னே நடப்பது போன்ற உணர்வு எங்களுக்கு இருந்தது. கோயில் வளாகத்தைச் சுற்றி எங்களுக்கு காண்பிக்கும் போது மதுரை மீனாட்சி அம்மாவின் கோயிலின் சிறப்பைப் பற்றி சுவாமிஜி பேசினார். மதுரையிலிருந்து, நாங்கள் சாத்தூருக்கு புறப்பட்டோம், அங்கு தான் சுவாமிஜி தனது குழந்தை பருவ நாட்களை கழித்தார்.
சுவாமிஜி எங்களை அவர் படித்த பள்ளிக்கு அழைத்து சென்று, அவரது தாயார் குருமதா பர்வதவர்தினி காரு சாத்தூரில் வசிப்பதாக கூறினார். சுவாமிஜியிடம் அவரின் தரிசனமும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். சுவாமிஜி எனக்கு அந்த முகவரியை கொடுத்துவிட்டு, தனியாக செல்லும்படி கூறி விட்டு ரயில் நிலையத்திற்கு புறப்பட்டார். நான் அந்த முகவரியை அடைந்தேன், அது சுவாமிஜியின் மூத்த சகோதரர் ஸ்ரீ சங்கரநாராயண காருவின் இல்லமாக இருந்தது. நான் என்னை அறிமுகப்படுத்தி கொண்டு , என்னை சுவாமிஜி அனுப்பியதாக அவரிடம் சொன்ன பிறகு, அவர் என்னை குருமாதாவின் தரிசனம் செய்ய அழைத்து சென்றார்.
சுவாமிஜி பல சந்தர்ப்பங்களில் குருமாதா பர்வதவர்த்தினியை பற்றி பேசினார். துர்கா சப்தசதியின் ஸ்லோகங்களை ஒரு தாலாட்டமாக ஓதுவார் என்றும் , எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா நேரங்களிலும் சப்தசதி பாராயணம் செய்து கொண்டிருப்பார் என்றும் சுவாமிஜி நினைவு கூர்ந்தார். ஆன்மீக மற்றும் தத்துவ விஷயங்களைப் பற்றி மிக எளிதாகப் பேசும் திறன் அவர்களுக்கு இருந்தது, இது ஒரு சாதாரண மனிதனால் கூட எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது.
சுவாமிஜியின் ஆசீர்வாதத்தின் காரணமாக, அவர்களை தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது . ஆனால் அவர்களுடைய உடல்நிலையைப் பார்த்து நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அவர்களுக்கு பார்வை கிட்டத்தட்ட முற்றிலும் மறைந்துவிட்டது. நான் அவர்களை வணங்கி விட்டு , ஸ்ரீ சங்கரநாராயண காருவிடம் விடைபெற்று கொண்டு கிளம்பினேன். பிறகு கொஞ்சம் யோசனை செய்து , நான் என் நண்பர் கே.பி.வி.ஜி கிருஷ்ணமூர்த்தி காருவிற்கு ஒரு தந்தி கொடுத்தேன் , அவர் சுவாமிஜியின் பக்தரும் கூட. குருமதாவின் உடல்நிலையை அவரிடம் விளக்கினேன், அவர்களை ஸ்ரீசைலத்திற்கு அழைத்து வருவதற்கான எனது விருப்பத்தை வெளிப்படுத்தினேன். கே.பி.வி.ஜி கிருஷ்ணமூர்த்தி காருவும் அதற்கு ஆதரவாக இருந்தார், சுவாமிஜியை இதற்கு எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கூறினார.நான் குருமாதவின் உடல்நிலையை குறித்து சுவாமிஜியிடம் எடுத்து சொல்லி அவர்கள் சுவாமிஜியின் அருகில் இருந்தால் அவர்கள் உடல்நிலை சீராகும் என்று கூறினேன்.இதற்கு முதலில் சுவாமிஜி ஒப்பு கொள்ள வில்லை.தனக்கு இவ்வுலகில் உள்ள அனைத்தும் ,உள்ள அனைவரும் ஒன்றே என்று என்னிடம் கூறினார்.
குருமாதவை ஸ்ரீசைலம் அழைத்து சென்றால் அவர்களை நான் என் தாயார் போல பார்த்து கொள்ளுவேன் என்று சுவாமிஜியை வேண்டி கொண்டேன் .இந்த மகத்தான பணியை எனக்கு தருமாறு கெஞ்சினேன்.சுவாமிஜி முடிவில் இதற்கு ஒப்புக் கொண்டார். இந்த பிரயாணத்தை முடித்துக்கொண்டு ஸ்ரீசைலம் திரும்பி செல்லும் போது வந்து தாயாரை அழைத்து செல்வோம் என்று கூறினார். நாங்கள் சாத்தூரிலிருந்து எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
அந்த வருடம் ஸ்வாமிஜி தரிசனத்து பிறகு எனக்கு பல மகான்களின் தரிசனமும் கிடைக்கப்பற்று , பல அசாதரணமான நிகழ்வுகளையும் நான் கண்ணுற்றேன் . என்னுடைய குருவை ஈன்ற அந்த குருமாதாவின் தரிசனம் கிடைக்க பெற்று நான் பெரும் மகிழ்ச்சி அடைத்தேன்.
|| யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேணே ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்தே நமஸ்தஸ்தே நமஸ்தஸ்தே நமோநமஹ ||
தொடரும்
ความคิดเห็น