ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பிஆர்கே)
குருவின் வாழ்க்கை வரலாற்றின் முக்கியத்துவத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. குருவை பற்றி நம் மனதில் ஒரு சிந்தனை முளைக்க கூட, அவருடைய அருளை பெற்றுருக்க வேண்டும். குருவை பற்றி சிந்திப்பது இவ்வாழ்க்கை துயரங்களிலிருந்து நம்மை விடுவித்து, எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு குருவுக்கு அப்பாற்பட்ட தத்துவம், தபஸ் அல்லது ஞானம் எதுவும் இல்லை. பூர்ணானந்த ஸ்வரூபமான சுவாமிஜியின் அருகில் தங்கி இருந்து ,அவரை தரிசனம் செய்வதற்கு பல ஜென்ம புன்னியம் வேண்டும் . சுவாமிஜியின் வடிவம், எண்ணங்கள் மற்றும் சன்னிதி ஆகியவற்றிலிருந்து பெறக்கூடிய சக்தியும் மகிழ்ச்சியும் மிக உயர்ந்தவை மட்டுமன்றி ஒப்பிலாதவை . சுவாமிஜியின் பெற்றோர் மற்றும் குருவை பற்றி மேலும் அறிய எங்கள் பயணம் திருச்செந்தூர் வரை எங்களை அழைத்துச் சென்றது, அதற்குள், சில அசாதாரண அனுபவங்கள் எங்களுக்கு கிடைக்க பெற்றோம்.
அவரது தந்தையும் முதல் குருவுமான ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரி காருவின் அறிவுறுத்தலின் படி, சுவாமிஜி குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அவர் அவைகளை மிகவும் நேர்மையுடன் நிறைவேற்றி குடும்பத்தை நிலை நிறுத்தி வைத்தார் . தனது கடமைகளை நிறைவேற்றிய பின்னர், மறைந்த தனது தந்தையுடன் சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் தவத்தின் பாதையைத் சுவாமிஜி தேர்ந்தெடுத்தார்.
திருச்செந்தூரில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தபின், ராஜு காருவும் நானும் சுவாமிஜியுடன் கல்லிடைகுறிச்சிக்கு சென்றோம். சுவாமிஜி எங்களை வழியில் ஒரு விஷ்ணு கோவிலுக்கு அழைத்துச் சென்று, தபம் செய்ய செல்லும் வழியில், சுவாமிஜி இந்த கோவிலில் சிறிது நேரம் ஓய்வெடுத்ததாகவும், கோவிலின் அர்ச்சகர் அவருக்கு சேவை செய்ததாகவும் கூறினார். பிறகு சுவாமிஜி எங்களை கல்லிடைகுறிச்சியில் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷதரின் மூதாதையர்களின் அதிஷ்டானங்களுக்கு அழைத்துச் சென்றார்.
சுவாமிஜியின் நடை வேகத்திற்கு ஈடு கொடுக்க மிகவும் கடினமாக இருந்தது. அவர் ஒளி வேகத்தில் அதிக தூரம் நடக்க முடியும்! நாங்கள் பல வாரங்களாக தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருந்ததால், ராஜு காருவும் நானும் சோர்ந்து போயிருந்தோம், நடக்க கடினமாக இருந்தது. எங்களை நன்றாக கவனித்துக்கொண்டாலும், பயணம் முழுவதும் எந்த ஒரு குறை இல்லாமல் பார்த்துக் கொண்டாலும், சுவாமிஜி மட்டும் இன்னும் மிக உற்சாகமாகவும் உவைகையோடும் இருந்தார். கல்லிடைகுறிச்சியிலிருந்து இருந்து தென்காசி சென்றோம். சுவாமிஜி எங்களை அவரது முக்கியமான பக்தர்களில் ஒருவரான ஸ்ரீ துரைராஜுகாருவின் வீட்டிற்கு அழைத்து சென்றார். சுவாமிஜி தனது தபோஸ்தானத்தில் இருந்தபோது, துரைராஜு காரு நிறைய சேவை செய்தார் என்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஸ்ரீ ராக்காடி பாபாவின் தரிசனம் கிடைத்ததாகவும் கூறினார். காரையாறில் உள்ள ஸ்ரீ துரைராஜு காருவின் வீட்டிற்கு பாபாவும் சுவாமிஜியும் அடிக்கடி சென்றதாக எங்களிடம் கூறும்போது, சுவாமிஜி அவரது சேவையை மிகவும் பாராட்டினார். இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டில் கழித்தபின், சுவாமிஜி எங்களை பாபனாசனத்திற்கு அழைத்து சென்றார். ராஜு காருவும் நானும் சுவாமிஜியுடன் சேர்ந்து அம்பசமுத்திரத்தில் இருந்து பாபனாசனம் வரை நடக்க ஆரம்பித்தோம். சூரியன் ஏற்கனவே அஸ்தமித்து , மெதுவாக இருட்டாகிவிட்டது. அந்த இருளில், ராஜு காருவும் நானும் சோர்வாகவும் தூக்கத்திலும் இருந்தோம். சுவாமிஜி எங்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருந்தார், நாங்கள் அவரைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தோம் . நாங்கள் எப்போது பாபனாசத்தை அடைவோம் என்று யோசித்துக்கொண்டே பயணத்தை தொடர்தோம்.
உடம்பில் சக்தி அனைத்தும் இழந்த நிலையில் நாங்கள் நடந்து கொண்டிருந்தபோது, சுவாமிஜி, “இப்போது நாம் ஆற்றைக் கடக்க வேண்டும்” என்றார். முற்றிலும் தெம்பில்லாத நிலையில் ஒரு நதியைக் கடப்பது மிகப்பெரிய பணியாகத் தோன்றியது. சுவாமிஜி மீது முழு நம்பிக்கை வைத்து, நான் கண்களை மூடிக்கொண்டு, சுவாமிஜியின் தோளில் கை வைத்து கொண்டு அவருக்கு பின்னால் நடந்தேன். ராஜு காருவும் , என் தோளை பிடித்துக் கொண்டு, என் பின்னால் நடந்து வந்தார் . நதி ஓட்டத்தின் சத்தத்தை நாங்கள் கேட்க முடிந்தது, நாங்கள் எப்போது அதை நெருங்குவோம் என்று யோசித்தோம். ஆற்றின் ஓட்டம் எப்படி இருக்கும் என்று நினைத்து நாங்கள் தொடர்ந்து நடந்தோம். நாங்கள் சிறிது நேரம் நடந்த பிறகு, சுவாமிஜி, “இப்போது நாம் ஆற்றை கடந்துவிட்டோம்” என்றார். ஆச்சரியத்தில், நான் கண்களைத் திறந்து என் முழு உடலையும் சோதித்தேன், ஆனால் என்னால் ஈரப்பதத்தை உணர முடியவில்லை! நான் திரும்பிச் பார்த்த போது , நாங்கள் ஆற்றைக் கடந்து அதிலிருந்து வெகு தூரம் கடந்து விட்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டேன். சுவாமிஜி அப்போது ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் இருப்பதாகவும், நாங்கள் பாலத்தின் வழியே நடந்தோம் என்றும் கூறினார். இன்றுவரை கூட, அந்த இரவில் எங்கள் நடை மற்றும் பாலம் பற்றி நினைத்து ஆச்சரியப்படுகிறேன்.
நள்ளிரவில் பாபனாசனத்தை அடைந்தோம். பாபனாசனத்தில், ஆற்றங்கரையில், ஒரு கோவிலும் அதைச் சுற்றி பல சிறிய கோயில்களும் இருந்தன. கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு மண்டபத்தில் இரவு ஓய்வெடுப்போம், மறுநாள் காலையில் பயணத்தைத் தொடருவோம் என்று சுவாமிஜி கூறினார். உயரத்தில் தாழ்வாரம் ஒன்று இருந்தது, அதன் அருகே நதி ஓடியது. சுவாமிஜி எங்களிடம் சொன்னார், அவர் தபஸ் செய்து கொண்டிருந்தபோது, ஸ்ரீ ராக்காடி பாபா இதே மண்டபத்தில் தான் தூங்கினார் என்றார் . தாழ்வாரத்தில், நான் ஆற்றின் ஓரத்தை நோக்கி தூங்கினேன், ராஜு காரு எனக்கு அடுத்தபடியாகவும், சுவாமிஜி அவருக்கு அடுத்தபடியாகவும் தூங்கினார்.அது ஒரு குளிர்ந்த குளிர்கால இரவு, ராஜு காருவும் நானும் எங்களிடம் இருந்த அனைத்து போர்வைகளையும் பயன்படுத்தி கொண்டோம் , அதே நேரத்தில் சுவாமிஜி அவரது கௌபீனத்தில் தூங்கினார். சுவாமிஜிக்கு குளிரும் என்ற கவலையில் , நான் என் போர்வைகளில் ஒன்றை அவருக்கு வழங்கினேன். ஆனால் ராஜு காருவிக்கு குளிரை தாங்கும் சக்தி குறைவாக இருந்ததால், சுவாமிஜி அந்த போர்வையை அவருக்குக் கொடுத்து விட்டு , அவர் கௌபீனதுடன் மட்டும் தூங்க முடிவு செய்தார்.
பயணத்தில் களைத்துப்போயிருந்ததால், விரைவில் தூங்கிவிட்டோம். நள்ளிரவில், என் தூக்கம் கலைந்து போய் , நான் சுற்றிப் பார்த்தபோது, ராஜு காருவை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில், யாரோ ஒருவர், “சுவாமி! சுவாமி! ” ஆற்றில் இருந்து கத்துவது கேட்டது . ராஜு காரு ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்று நான் பயந்து சுவாமிஜியை எழுப்பினேன். சுவாமிஜி கண்களை திறந்து என்ன நடந்தது என்று கேட்டார். ராஜு காரு நீரில் மூழ்கி கொண்டிருப்பதாகவும் ,எனக்கு நீச்சல் தெரியாதலால் ஸ்வாமிஜி தான் அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறினேன் .சுவாமிஜி அந்த நதி நீரை பார்த்துவிட்டு “ அவன் இறந்து போக மாட்டான் “ என்று கூறி விட்டு மீண்டும் தூங்க சென்று விட்டார் . ராஜு காருவிக்கு எதுவும் ஆகி விட்டால் நான் தான் அவர் குடும்பத்திற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்று பயந்தேன். வேறு வழி இல்லாமல் நான் நீரில் இறங்குவதற்கு தயாரானேன்.என்னை தைரிய படுத்திகொண்டிருந்த போது ராஜுகாரு என் பின் புறத்திலிருந்து வந்து என் அருகில் வந்து படுத்துக் கொண்டார் .அழகான அந்த வானில் நட்சத்திரங்களை பார்பதற்க்காக தான் மற்றொரு இடத்திற்கு சென்றதாக கூறினார்.அதற்குள் சிறிது சூரிய ஒளி வந்து விட்டது .இரவு ” சுவாமி , சுவாமி” என்று கத்தியது அங்கிருந்த ஐயப்பா பக்தர்கள் சிலர் என்பதை நான் உணர்தேன் .அந்த ராத்திரி நான் அனுபவித்த மன உளைச்சலை வர்ணிக்க முடியாது. அதே சமயம் ராஜுகாரு பத்திரமாக இருந்தது எனக்கு நிம்மதியாக இருந்தது .இதை எல்லாம் அமைதியாக பார்த்து கொண்டிருந்த சுவாமிஜி கடைசியில் குழந்தை போல் சிரித்தார் .அடுத்த நாள் காலை நாங்கள் பாபநாசத்திலிருந்து பயணத்தை தொடர்தோம் .
தொடரும்
Kommentarer