ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பி.ஆர்.கே)
ஸ்ரீ பூர்ணானந்த சுவாமியின் புனிதமான சன்னிதியில் ஆசிர்வதிக்க படுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகும் . இதை சுவாமிஜியின் தெய்வீக அருள் மற்றும் நமது பூர்வ கால புண்ணியத்தினால் மட்டுமே பெற முடியும் . மேலும், சுவாமிஜியின் தரிசனம் மற்றும் அவரது ஆசீர்வாதங்களுக்குப் பின்னால் ஒரு வலுவான நோக்கம் தேவை. ஒவ்வொரு பக்தருக்கும் சுவாமிஜியின் முதல் தரிசனத்துடன் ஒரு வலு கட்டாயமான கதையும் காரணமும் இணைக்கப்பட்டுள்ளது. இதே போல், சுவாமிஜியின் பரம பக்தர்களில் ஒருவரான கே.பி.வி.ஜி காருவும் சுவாமிஜியை முதன் முதலில் காண்பதற்க்கு ஒரு வலுவான காரணமும் இருந்தது .
நான் ஸ்ரீசைலம் செல்லுமுன், கே.பி.வி.ஜி கிருஷ்ண மூர்த்தி காருவும் நானும் குண்டூரில் வசித்து வந்தோம். அந்த நாட்களில் இருந்து, நாங்கள் சிறந்த நண்பர்களாக இருந்தோம். நாங்கள் இருவரும் மிக சிறந்த நட்பில் இணைந்திருந்தோம் . நான் வேலை செய்ய தொடங்குவதற்கு முன்பு, கேபிவிஜி காரு எனக்கு சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு எழுதும் தேர்வுகளில் பெரும் உதவி செய்தார் .நான் என் வேலை நிமித்தம் , ஸ்ரீசைலம் சென்றேன், அவர் ஹைதராபாத்தின் பிஹெச்எல் நிறுவனத்திற்கு சென்றார். தூரத்தினால் பிரிக்கப்பட்டிருந்தாலும், நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் எந்த ஒரு கஷ்ட நஷ்டத்திலும் உறுதுணையாக நின்றோம். பிஹெச்எல் நிறுவனத்தில் ஒரு உயர்ந்த வேலை பெற்ற கேபிவிஜி காரு 1969 இல் எதிர்பாராத உடல்நல பிரச்சினையை எதிர்கொண்டார். அவரது உடல் நிலை நிச்சயமற்றது என்றும் அவர் உயிருக்கு எப்போதும் எதுவும் ஏற்படக்கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் வாழ இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன என்றும் அவர்கள் கூறினர். அவர் குழந்தைகளுடன் திருமணமான மனிதர். அவரது அவல நிலையை விளக்கி, கே.பி.வி.ஜி காரு எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்குள், நான் ஏற்கனவே சுவாமிஜியின் தரிசனம் பெற்று இருந்தேன் . கே.பி.வி.ஜி காருவின் நிலைமை குறித்து நான் சுவாமிஜிக்கு விளக்கிய பிறகு, சுவாமிஜி என்னை ஹைதராபாத் சென்று ஹடகேஸ்வரத்திற்கு அவரை அழைத்து வரச் சொன்னார். அந்த நேரத்தில், ஹைதராபாத்தில் பல போராட்டங்களும் கலவரங்களும் நடந்து கொண்டிருந்ததது . அந்த இடையூறுகள் அனைத்திற்கும் இடையில், கே.பி.வி.ஜி காருவும் நானும் சுவாமிஜியிடம் பிரார்த்தனை செய்து கொண்டு ஹடகேஸ்வரத்தை அடைந்தோம். எந்த நேரத்திலும் சுவாமிஜி கே.பி.வி.ஜி காருவை அழைப்பார் என்று எதிர்பார்த்த நான், அவரை ஹடகேஸ்வர சுவாமி கோவிலில் தங்கும்படி கேட்டேன் கொண்டேன் . அந்த வகையில், சுவாமிஜியின் அழைப்பை எதிர் பார்த்து மூன்று நாட்கள் கே.பி.வி.ஜி காருவும் அந்த கோயிலில் செலவிட்டார். சுவாமிஜி தரிசனம் கொடுக்க தயாராக இல்லையையோ என்று சந்தேகித்த கே.பி.வி.ஜி காரு மனம் உடைந்து மறுநாள் ஹைதராபாத் திரும்ப முடிவு செய்தார். மூன்றாம் நாள் மாலை , சுவாமிஜி என்னிடம் கேபிவிஜி காருவை அழைத்து வர சொன்னார். சூரிய அஸ்தமனத்தின் போது சுவாமிஜியின் தெய்வீக தரிசனம் அவருக்கு கிடைத்தது . சுவாமிஜி சில வேப்ப இலைகளை கேபிவிஜி காருவிக்கு கொடுத்து ,சூரிய அஸ்தமனத்தை பார்த்தவாறு அந்த இலைகளை மெல்ல சொன்னார். கே.பி.வி.ஜி காருவும் சுவாமிஜியின் அறிவுறுத்தலைப் பின்பற்றினார். அவரது உடல்நிலை சீராகும் என்றும் அவர் வலுவாக இருப்பார் என்றும் சுவாமிஜி கே.பி.வி.ஜி காருவிக்கு உறுதியளித்தார். அந்த வகையில், கே.பி.வி.ஜி காரு சுவாமிஜியின் முதல் தரிசனத்தை பெற்றார் .
கே.பி.வி.ஜி காரு ஹைதராபாத்திற்கு திரும்பிய பிறகு, சுவாமிஜி உறுதி அளித்ததைப் போல, அவரது உடல்நிலை சிறிது காலத்தில் சரியானது . பின்னர் அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார்,அதில் அவர் சுவாமிஜியால் தான் அவரது உடல்நிலை சரியானது என்றும் , சுவாமிஜி அவருக்கு ஒரு புதிய வாழ்க்கையை ஆசீர்வதித்தார் என்றும் . தனது முழு வாழ்க்கையையும் சுவாமிஜியின் சேவைக்காக அர்ப்பணிப்பேன் என்றும் கூறி இருந்தார் . அதற்கு பிறகு , கே.பி.வி.ஜி காருவிற்கு சுவாமிஜி மீது சந்தேகத்திற்கு இடமில்லாத முழுமையான நம்பிக்கை ஏற்பட்டது . அதே சமயத்தில் நாங்கள் தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தோம், குருமாதா மற்றும் குருபாதுகைகளுடன் நாங்கள் ஸ்ரீசைலம் திரும்பினோம், நான் பணி உயர்வு பெற்றேன் .
ஸ்ரீ பூர்னானந்த சுவாமியின் கட்டளையைத் தொடர்ந்து, நான் பதவி உயர்வு ஏற்று கொண்டு போச்சம்பாட்டுக்கு செல்வதற்கு தயாரானேன். இதற்கிடையில், ஹடகேஸ்வரத்தில் சுவாமிஜியுடன் தங்கியிருந்த ரமண பாபா நோய்வாய்ப்பட்டார். அவருக்கு விரைவாக முறையான மருத்துவ சிகிச்சை கிடைத்ததாக வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ரமண பாபாவுக்கு விரைவில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று , சுவாமிஜி எனக்கு அறிவுறுத்தினார். ஹைதராபாத்தில் உள்ள BHEL இல் மிகவும் புகழ்பெற்ற மருத்துவமனை இருந்தது. எனது நண்பர் கே.பி.வி.ஜி காரு அப்போது பி.ஹெச்.எல். பணியாற்றி வந்ததால் ரமண பாபாவை ஹைதராபாத்திற்கு அழைத்து செல்ல முடிவு செய்தேன், ஏனெனில் கே.பி.வி.ஜி காருவும் எனக்கு உதவிக்கு இருந்ததால் . சுவாமிஜி இதற்கு சம்மதித்து, ரமண பாபாவை ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லும்படி என்னிடம் சொன்னார் . குருமாதாவின் கண் பார்வைக்கு கூட ஹைதராபாத்திலும் சிகிச்சை பெற முடியும் என்று கே.பி.வி.ஜி காரு கூறினார். சுவாமிஜியின் அனுமதியைப் பெற்ற பிறகு, நான் குருமாதா மற்றும் ரமண பாபாவை ஹைதராபாத்தில் உள்ள கே.பி.வி.ஜி காருவின் வீட்டிற்கு அழைத்து சென்றேன்.
ரமண பாபாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. கே.பி.வி.ஜி காருவும் ரமண பாபாவின் அருகிலேயே தங்கி அவரை நன்கு கவனித்துக்கொண்டார். இதற்கிடையில், வேலையில் சேரும் உத்தரவுகளில் கையெழுத்திட நான் போச்சம்பாட்டுக்குச் சென்றேன், அங்கிருந்து சுவாமிஜியின் தரிசனம் செய்ய ஹடகேஸ்வரம் சென்றேன். குருமாதா தனது மோசமான கண் பார்வைக்கு சுவாமிஜியின் முன்னிலையில் மட்டுமே சிகிச்சை பெறுவேன் என்ற நிபந்தனையை முன்வைத்தார். அந்த காரணத்திற்காக, சுவாமிஜியும் என்னுடன் ஹைதராபாத்திற்கு வந்தார் . அப்போது, முஷீராபாத்தில் வேம்படி சூரியநாராயணாகாரு என்ற பெயரில் ஒரு மருத்துவர் இருந்தார். அவர் அரை மாதம் தெனாலியில், மற்ற பாதி நாட்கள் முஷீராபாத்திலும் தங்குவார். அவர் ஆந்திர மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற மருத்துவராக இருந்தார். சுவாமிஜிம் , கே.பி.வி.ஜி காருவும் நானும் குரு மாதாவை அவரிடம் அழைத்து சென்றோம். சுவாமிஜியின் தரிசனம் கிடைக்க பெற்ற அவர் மிகவும் ஆனந்தம் அடைந்தார். குருமாதாவுக்கு இரண்டு மருத்துவ சிகிச்சைகள் செய்தார். சிகிச்சைக்கு பின்னர், குருமாதா, சுவாமிஜி மற்றும் ரமண பாபா ஆகியோர் கே.பி.வி.ஜி காருவின் வீட்டில் தங்கினர். சுவாமிஜி ரமண பாபாவை மெட்ராஸில் இருந்த அவரது தாயாரை சென்று பார்க்கும் படிகூறி அனுப்பினார். விரைவில், நான் போச்சம்பாட்டுக்கு புறப்பட்டேன். குருமதாவும் சுவாமிஜியும் பிஹெலில் உள்ள கேபிவிஜி காருவின் வீட்டில் தொடர்ந்து தங்கினர் . கே.பி.வி.ஜி காருவிக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர், இந்த வகையில், பலருக்கு சுவாமிஜின் தரிசனம் கிடைத்தது .ராமா ராவ் காரு மற்றும் சீதாராமாராவ் காரு போன்ற சில முக்கியமான பக்தர்களுக்கும் சுவாமிஜியின் முதல் தரிசனம் கிடைத்தது .நான்போச்சம்பாடுவிற்கு சென்று விட்டாலும் என் எண்ணமெல்லாம் சுவாமிஜியுடனே இருந்தது .எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் நான் சுவாமிஜியையும் குருமாதாவையும் காண ஐராபாத் சென்று வந்தேன்.
தொடரும்
Comments